M.Ganesan

மோ.கணேசன்

Profession எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், பதிப்பாளர்

Biography

Dr.மோ.கணேசன்,M.A.,M.A.,Ph.D
மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர்.
பிறப்பும் இருப்பிடமும்
சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி – வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.
கல்வி
ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு (1985-1993) வரையிலும், ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை (1993 – 1997) படித்து முடித்தவர். 1999-இல் ஆத்தூர், வட சென்னிமலையில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.வரலாறு படிக்க சேர்ந்தார். தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியரும், இந்நாள் பிரபல எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களிடம் கல்லூரிப் பருவத்தில் தமிழ் பயின்றவர். 2002-இல் படித்து முடித்து வெளியே வந்தபோது, முதல் தலைமுறைப் பட்டதாரியாக வெளியே வந்தார். 2004-ல் எம்ஏ இதழியல், 2017-ல் எம்ஏ வரலாற்றியல் படித்து முடித்தவர். 2024-ல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் பிஎச்.டி முடித்தவர்.

பத்திரிகை துறை
அரசுக் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, விகடன் குழுமத்தால் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2001-02 மாணவ பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில், எம்.ஏ., முதுகலை இதழியல் படிக்கசேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருந்தபோதே ‘இளஞ்சிறகு’ என்ற சிற்றிதழை நடத்தியவர். படித்து முடித்ததும், கடலூரில் யுனெஸ்கோவிற்காக களப்பணி ஆய்வில் ஓராண்டு பணியாற்றினார்.
2006 முதல் 2008 வரை தினமணி இணையதளத்தில் கருத்து ஆசிரியர் பணி. 2008-இல் கிரிக்கெட் ஆர்க்கைவ் எனும் இணையதளத்தில் உதவி ஆசிரியர் பணி, 2010-இல் பிலிமிக்ஸ் எனும் சினிமா இணையதளத்தில் பொறுப்பு ஆசிரியர் பணியாற்றியவர். 2011-இல் ஒன்பது குழி சம்பத் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். 2011 முதல் 2012 வரை மாலைமலர் இணையதளத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். 2012 முதல் 2020 செப்டம்பர் வரை புதியதலைமுறை கல்வி வார இதழில் தலைமை உதவி ஆசிரியாராகப் பணியாற்றிவர். 23 ஆண்டுகள் தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
25 பள்ளி மாணவர்களுக்கு பத்திரிகையாளர் பயிற்சி அளித்து, அவர்களையே வைத்து ‘சிட்டெறும்பு பேசுது’ என்று காலாண்டிதழை நடத்தியவர். பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் குறித்த சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், 2026 – 2029, 2023 – 2026, 2020 – 2023, ஆகிய கல்வி ஆண்டுகளுக்கான பிஎஸ்சி விஷுவல் கம்யூனிக்கேஷன் பாடத்திட்டக்குழுவின் உறுப்பினர். 2020 ஜூலை முதல் வாலு டிவியின் நிறுவனர், நிர்வாக இயக்குநர். நீச்சல் பயிற்சியாளர்: நிழற்படக்கலைஞர், ஓவியர், நாணயம், கரன்சிகள் சேகரிப்பாளர், தபால்தலை சேகரிப்பாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர், பதிப்பாளர், நடிகர், போஸ்ட்கிராஸிங் அமைப்பின் அம்பாஸிடர் என பன்முகம் கொண்டவர்.
செய்தி வாசிப்பாளர்
2016-ல், பொதிகை (தூர்தர்ஷன்) பகுதி நேர செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.
ஆய்வுக்கட்டுரைகள்
சர்வேதச வானொலிகளான இலங்கை தமிழ் வானொலி, சீனத்தமிழ் வானொலி, பிபிசி தமிழோசை, ரேடியோ வேரித்தாஸ் ஆகிய வானொலிகள் குறித்து சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை பதிப்பித்த – பன்முகப் பார்வையில் சர்வதேச வானொலி புத்தக வரிசையில், 4 – ஆய்வுக்கட்டுரைகளை எழுதி இருக்கிறார். மதுரையில் 2019-ல் நடைபெற்ற உலகத் தமிழிசை மாநாட்டில், ’தமிழிசையை வளர்த்த கிராமிய இசைக்கலைஞர்கள்’ என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு, பாரதி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் புதிய ஊடகத்துறை மாணவர்களுக்கு வருகைதரு உதவிப் பேராசிரியராக இருந்திருக்கிறார்.
தன்னம்பிக்கை பேச்சாளர்
பல்வேறு அரசுப் பள்ளிகள், கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும் கலந்து கொண்டு, இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்துள்ளார். 2017-ல், புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘புத்தகம் நமக்கு என்ன செய்யும்’ என்ற தலைப்பிலும், 2020-ல் ’நமது கதைகள் எங்கே போயின’ என்ற தலைப்பிலும் உரையாற்றியவர்.
கௌரவ ஆசிரியர்
வட சென்னையில் இருந்து வெளிவரும் ‘சிட்டெறும்பு பேசுது’ எனும் சிறுவர்கள் எழுத்தில் வெளிவரும் காலாண்டிதழுக்கு ஓராண்டு காலம் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பட்டிமன்ற பேச்சாளர்
மறைந்த கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றப் பேச்சாளராகவும், தமிழன் தொலைக்காட்சியில் பா.இறையரசன் ஐயா தலைமையில் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர்.

எழுதிய நூல்கள்
இதுவரை 16 நூல்கள் எழுதியுள்ளார்.
அறம் செய்ய விரும்புவோம் என்ற தலைப்பில் ஆத்திசூடி கதைகளை நாடக வடிவில் 2017-அக்டோபரில் எழுதியுள்ளார். இதை பாரதி புத்தகாலயத்தில் ஃபுக் பார் சில்ட்ரன் பதிப்பித்துள்ளது. இந்த நாடக நூல் சிங்கப்பூர் தேசிய நூலகத்திலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசுப்பள்ளிகளில் நாடகமாகவும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்நூல் தமிழக அரசின் நூலகத்துறையில் வாங்கப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள அரசு கிளை நூலகங்களிலும் இடம்பிடித்துள்ளது. தமிழ் இந்து, தினமலர், தினமலர் பட்டம், சுட்டி விகடன் இதழ்களால் பாரட்டு பெற்ற நூல்.
இதே பதிப்பகம், 2017- டிசம்பரில், இவர் எழுதிய சிறுவர் பாடல் தொகுதியான ‘ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி என்ற நூலை பதிப்பித்துள்ளது. 2018 ஜனவரியில் இவர் எழுதிய ’விடமாட்டேன் உன்னை’ – அறிவியல் திகில் நாவலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி – புத்தகம் மதுரை காமாரசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவி சுகந்தி என்பவரால் ‘அழ.வள்ளியப்பா முதல் தற்கால சிறார் கவிஞர்கள் வரை’ என்ற தலைப்பில் ஆய்வு நூல்களில் ஒன்றாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
விடமாட்டேன் உன்னை நாவல் – சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் காட்சித்தொடர்பியல் மாணவி ஒருவரால் ‘நிஜம்’ என்ற பெயரில் 15 நிமிட குறும்படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2020 சென்னை புத்தகக்காட்சியில் குறுக்கெழுத்து அறுபது – பொது அறிவை வளர்க்கும் குறுக்கெழுத்துப் புதிர்கள், டும் டும் டும் தண்டோரா – சிறார் பாடல்கள், வாலுவிடம் கேளுங்கள் – பொது அறிவு கேள்வி பதில்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டிருக்கிறார். 2020ல் வெளியான சிறுவர் புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகங்கள் என்று தமிழ் இந்து திசை இவரது புத்தகங்களையும் பட்டியிலிட்டுள்ளது.

2023 சென்னை புத்தகக்காட்சியில் இப்படித்தான் ஜெயித்தார்கள் – சாதாரண நிலையில் இருந்து சாதித்தவர்களின் நேர்காணல், மாயாவியின் திமிர் – சிறார் கதைகள் ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
2023 சென்னை புத்தகக்காட்சியில் மயில் போட்ட கணக்கு – சிறார் கதைகள், வாலுவின் ஜாலி புதிர்கள் என்ற இரு நூல்களை எழுதியுள்ளார். குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் விளையாட்டு ஆகிய இரண்டு நூல்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 சென்னை புத்தகக்காட்சியில் பாலாறு பதிப்பகத்திற்காக வரலாற்றில் புதைந்த உண்மைகள், டக்கு முக்குத் தக்காளி – சிறுவர் பாடல்கள் என்ற இரு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
2024ல் வாசிப்பு இயக்கத்திற்காக புவனேஸ்வரியுடன் இணைந்து மீனின் அழுகை என்ற குறும்புத்தகத்தில் காக்கா போட்ட வழக்கு என்ற பெயரில் கதை எழுதி இருக்கிறார்.
2026ல், பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான புக் பார் சில்ட்ரன் பதிப்பகம் மூலம், பொது அறிவுக் கேள்வி பதில்களான வாலுவிடம் கேளுங்கள் – பாகம் 1, வாலுவிடம் கேளுங்கள் – பாகம் 2, வாலுவிடம் கேளுங்கள் – பாகம் 3, வாலுவிடம் கேளுங்கள் – பாகம் 4, வாலுவிடம் கேளுங்கள் – பாகம் 5, ஆகிய புத்தகங்களும், நானும் பறப்பேன் – சிறுவர் பாடல்கள், வாலுவின் ஜாலி புதிர்கள் – பாகம் 2, வாலுவின் ஜாலி புதிர்கள் – பாகம் 3 ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

2026ல், தனது வாலு பதிப்பகத்தின் மூலம், காலை வணக்கக் காதல் கவிதைகள், குட்டித் தவளை கோபாலு – சிறுவர் பாடல்கள், குறுக்கெழுத்து முப்பது ஆகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வாலு டிவி நிறுவனராக
2020 ஜூலை 20ம் தேதி வாலு டிவி என்ற பெயரில் யூடியூப் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார். இன்று வரை ஆயிரத்தி அறுநூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளார். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை வைத்துள்ளார்.
போஸ்ட்கிராஸிங் அம்பாசிடராக
போலந்தில் இருந்து இயங்கும் போஸ்ட்கிராஸிங் எனும் சர்வதேச கடிதப்போக்குவரத்து அமைப்பின் தமிழகத் தூதுவராகவும் இருந்துவருகிறார்.
வாலு பதிப்பகத்தின் நிறுவனராக
2023 ஜூலை 17ல் தொடங்கிய தனது வாலு பதிப்பகத்தின் மூலம், 77வது இந்திய சுதந்திரத்தை முன்னிட்டு, 77 கவிஞர்களை ஒன்றிணைத்து 77வது சுதந்திர தின கவிதை மலர் என்ற பன்னாட்டு கவிதை மலரை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
61 எழுத்தாளர்களை ஒன்றிணைத்து ஒரு பக்க கதைகள் என்ற புத்தகத்தை வண்ணத்தில் தொகுத்துள்ளார். 70 கவிஞர்களை ஒன்றிணைத்து ’ஒரு கவளம் நிலாச்சோறு’ என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தை தொகுத்துள்ளார். 96 கவிஞர்களை ஒன்றிணைத்து ’அன்பெனும் பேராழி’ என்ற கவிதைப் புத்தகத்தை தொகுத்துள்ளார். 30 படைப்பாளிகளை ஒன்றிணைத்து ‘கதை கதையாம் விடுகதையாம்’ என்ற புத்தகத்தை தொகுத்துள்ளார். 40க்கும் மேற்பட்ட பாடலாசிரியர்களை ஒன்றிணைத்து உணர்வின் சந்தங்கள் என்ற புத்தகத்தை தொகுத்துள்ளார். க.மாதேஸ்வரன் எழுதிய ஒரு தாயம் விழட்டும் என்ற கவிதை நூலை பதிப்பித்துள்ளார். முனைவர் இரா.வனிதா எழுதிய குறள் பூக்கும் குழந்தை கதைகள் என்ற சிறுவர்கள் கதை நூலை வண்ணத்தில் பதிப்பித்துள்ளார்.
26 எழுத்தாளர்களை ஒன்றிணைத்து இரு பக்கக் கதைகள் என்ற என்ற புத்தகத்தை வண்ணத்தில் தொகுத்துள்ளார். 40 கவிஞர்களை ஒன்றிணைத்து உணர்வின் சந்தங்கள் – பகுதி 2 என்ற புத்தகத்தையும், 50 கவிஞர்களை ஒன்றிணைத்து 78வது சுதந்திர தின கவிதை மலர் ஆகிய புத்தகத்தையும் பதிப்பித்துள்ளார். 24 கவிஞர்களை ஒன்றிணைத்து ‘வளர்பிறைகளின் வானம்’ என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தை தொகுத்துள்ளார். தூத்துக்குடி போப் கல்லூரியின் தமிழ்த்துறையுடன் இணைந்து ‘காலந்தோறும் முத்தமிழின் போக்குகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கை நடத்தியவர், அதே தலைப்பில் ஆய்வுக்கோவையை பதிப்பித்து வெளியிட்டவர், இந்திய பொது நிர்வாகம் குறித்த தகவல்கள், எளிய சித்த மருத்துவக் குறிப்புகள், விடைக்கேற்ற வினாக்கள், தங்கமே எங்கே செல்கிறாய் ஆகிய புத்தகங்களின் பதிப்பாசிரியராக இருந்தவர்.
தற்போது தினமலர் பட்டம், பொம்மி, அரும்பு ஆகிய இதழ்களில் சிறார்களுக்காக பல்வேறு தகவல்களை எழுதிவருகிறார்.
துணை ஆசிரியராக
திருவாரூரில் இருந்து வெளிவரும் சிறுவர் மாத இதழான, பொம்மி இதழின் துணை ஆசிரியராக இருந்து வருகிறார்.
தமிழ் மொழி வல்லுநராக
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சர்வம்.ஏஐ நிறுவனத்தின் தமிழ் மொழி வல்லுநராக பணியாற்றி வருகிறார்.
உலக நாடுகளில் எனது புத்தகங்கள்
இவர் எழுதிய அறம் செய்ய விரும்புவோம், ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி, டும் டும் டும் தண்டோரா, மயில் போட்ட கணக்கு ஆகிய புத்தகங்கள், இலங்கை மற்றும் சிங்கப்பூர் நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. இவரது புத்தகங்களில் சில ஜெர்மன், இத்தாலி, அமெரிக்க, ஜப்பான் ஸ்வீடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
உலக மொழிகளில் எனது புத்தகங்கள்
சென்னையில் நடைபெற்ற 3வது சென்னை சர்வதேசப் புத்தகக்காட்சியில் நானெழுதிய “மயில் போட்ட கணக்கு” புத்தகம் 6 உலக நாடுகளிலும், ’அறம் செய்ய விரும்புவோம்’ புத்தகம் 2 உலக நாடுகளிலும், ‘மாயாவியின் திமிர்’ புத்தகம் 2 உலக நாடுகளிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
4வது சென்னை சர்வதேசப் புத்தகக்காட்சியில் நானெழுதிய “மயில் போட்ட கணக்கு” ‘மாயாவியின் திமிர்’, அறம் செய்ய விரும்புவோம் ஆகிய புத்தகங்கள் 8க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி கதைத்தொகுப்பில் எனது சிறுவர் சிறுகதை

நான் எழுதிய சிறுவர் கதைகளில் ஒன்றான *’மழையும் ஆடுகளும்’* என்ற கதை மத்திய அரசின் சாகித்திய அகாடமி தொகுக்க இருக்கும் சிறந்த சிறுவர் கதைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கதை ‘புக் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பித்துள்ள *மயில் போட்ட கணக்கு* என்ற புத்தகத்தில் முதல் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

நடிகராக
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறை உதவிப் பேராசிரியர் இயக்கிய ‘அய்யன் வள்ளுவன்’ என்ற பிரம்மாண்ட மேடை
நாடகத்தில் புலவராகவும், திருவள்ளுவராகவும் நடித்துள்ளார். இந்த நாடகம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும், 48வது சென்னை புத்தகக்காட்சியிலும் அரங்கேற்றப்பட்டுள்ளது. விரைவில் பல இடங்களில், பல நாடுகளில் இந்த நாடகம் அரங்கேற இருக்கிறது.
’தீண்டாத வசந்தம்’ (https://youtu.be/EHnXsCkl4-U?si=t-IG4q2idDgaUWWE) என்ற ஆவணக் குறும்படத்தில் வழக்கறிஞராக நடித்தவர். விரைவில் வெளிவர இருக்கும் ‘பகல் வேடம்’ எனும் திரைப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.
நடுவராக
புதிய தலைமுறை மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் நடத்திய ’சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சியின் சென்னை மண்டல நடுவராக இருந்திருக்கிறார். ஆவடியில் உள்ள முத்தமிழ் மன்றத்தின் பேச்சுப்போட்டி, கதை சொல்லல் போட்டி, கவிதைப் போட்டிகளின் நடுவராக இருந்திருக்கிறார்.

தொடர்பு முகவரி:

மோ.கணேசன், மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.
8/12. இரண்டாம் தளம், ராசு இல்லம்,
ரங்கநாதபுரம் முதல் குறுக்குத் தெரு,
மேற்குத் தாம்பரம், சென்னை – 600045.
கைப்பேசி: 9444296929, 9600045295

மின்னஞ்சல்: moganan@gmail.com

யூ டியூப்: https://www.youtube.com/vaalutv

முகநூல்: https://www.facebook.com/moganesan

வலைப்பூ: https://vaalupathippagam.blogspot.com/