| Profession | பேராசிரியர் |
|---|
நான் பிறந்த கிராமம் மேல்வில்வராயநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம். நான் 06-06-1935-ல் தந்தை திரு. பெருமாளுக்கும், தாய் திருமதி கண்ணாமாவுக்கும் பிறந்தேன். பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி படிப்பான தமிழ் வித்துவான் பட்டப்படிப்பை திருவையாறு தமிழ் கல்லூரியில் முடித்து, இறுதி தேர்வில் (1957-ல்) சென்னை பல்கலைக்கழகத்திலேயே முதன்மையாக வந்து, தங்கப்பதக்கமும், ஐந்தாம் ஜார்ஜின் ரூபாய் ஆயிரம் பரிசும் பெற்றேன்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.O.L., பட்டம், M.A., (ஆங்கிலம்) பட்டம், B.Ed., மற்றும் M.Ed., பட்டமும் பெற்றேன்.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் ஆங்கில பேராசிரியராகவும், முதல்வராக அரசு கலைக் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரியிலும் பணியாற்றி உள்ளேன்.
எனது கிராமத்தில் திருக்குறள் கழகக் தலைவராக இருந்து திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளேன்.
இதுவரை தமிழில் எட்டு நூல்களும், ஆங்கிலத்தில் இரண்டு நூல்களும் எழுதியுள்ளேன். நியூயார்க் முத்தமிழ் இதழில் கதைகளும், மேரிலேன்ட் நூல் நிலையத்தில் ஆங்கில கவிதையையும் பதிவேற்றியுள்ளேன். சிவஞான போத வகுப்புகளை தலைவராக இருந்து பிறரை சொற்பொழிவு ஆற்ற செய்துள்ளேன்.