Dr.N.SULOCHANA

முனைவர் நா.சுலோசனா

Profession தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேராசிரியர், தமிழ் அமைப்புகள்

Biography

முனைவர் நா.சுலோசனா (Dr.N.Sulochana) (எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., நெட்.,) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியினை உள்ளூர் நடுநிலைப் பள்ளியிலும் மேல் நிலைக் கல்வியை ஆலங்குளம் அரசுப் பள்ளியிலும் தமிழ்வழி பயின்றவர். பட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றவர். தற்போது சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்மொழி (ம) மொழியியல் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஜி.வி.என்., கல்லூரி., எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் பணியாற்றியவர். கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். வட்டார வழக்குச் சொல்லாய்வு, ஊர்ப்பெயராய்வு, கரிசல் வட்டார சொலவடைகளைத் திரட்டுவது என மொழி குறித்த ஆய்வுத் தளங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்ப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் ’இளம் தமிழ் ஆய்வாளர்’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 9 முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் 25 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களையும் 8 முதுகலை பட்ட மாணவர்களையும் உருவாக்கியவர். பல ஆய்வாளர்களை உருவாக்கிய இவர் மொழி, இனம், சமூகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆய்விதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவர் 11 ஆய்வு நூல்களையும் பதிப்பாசிரியராக 15 நூல்களையும் பொதுப் பதிப்பாசிரியராக 22 நூல்களையும் படைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சங்க இலக்கியச் சொற்கள் குறித்தும் வட்டார வழக்குச் சொற்கள் குறித்தும் ஊர்ப்பெயர்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் விதமாக ‘மொழி அறிவோம்’ என்னும் வலையொளி வழியாக 1000க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

நூலாசிரியர் : 12 ஆய்வு நூல்கள்
1.திராவிட வேரும் விழுதுகளும்
2.செவ்விலக்கியச் சாரம்
3.குறிஞ்சிப்பாட்டு மலர்த்திரள்
4.தமிழ்மொழியும் தகவல் பரிமாற்றமும்
5.பெருஞ்சித்திரனாரின் மொழி, இனம், நாடு
6. பாவாணர் கோட்டமும் பாசறையும்
7.குறுந்தொகையில் ஓரெழுத்து- பொருள் நுட்பம்
8. பயன்பாட்டு வழக்கில் உறவுமுறைச் சொற்கள்
9. சூழல் நோக்கில் மொழிப் பயன்பாடு
10. திரைவானில் கலைஞர்
11. உப்பும் சமூக மதிப்பு மாற்றமும்
12. வட்டார வழக்குச் சொற்கள் : வேறுபாடும் பொருண்மை நுணுக்கமும்

படைப்பு இலக்கியம்
13. கரிசலும் கந்தகமும் (கவிதைத் தொகுப்பு)

பதிப்பாசிரியர் : 15 நூல்கள்
பன்னாடு மற்றும் தேசிய கருத்தரங்குகள்வழி பதிப்பாசிரியராக வெளிவந்த
ஆய்வுக்கோவைகள்
1. கவிதை, சிறுகதை, புதினம் படைப்பாளர் மற்றும் பாத்திரங்கள் குறித்த பன்முக ஆளுமை.
2. தமிழிலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்.
3. தனித்தமிழின் நோக்கும் போக்கும்.
4. தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும்.
5. மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்.
6. தமிழ்மொழி அகழாய்வுகள்.
7. தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்.
8. நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும்.
9. தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறைகள்.
10. பாரதி படைப்புகளில் பெண்கள்.
11. புதிய அணுகுமுறைகளின்வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும்.
12. கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி.
13. தமிழ்மொழி-இணையமும் இளையோர் வாழ்வியலும்
14. பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள்
15. தமிழிலக்கியத்தில் போர்: பேரவலங்களும் பெருமிதங்களும்

பொதுப் பதிப்பாசிரியர் : 22 நூல்கள்
1. குலோத்துங்கனின் கவிதை வளம்
2. வீரமாமுனிவரின் சொல்லிலக்கணக் கோட்பாடு
3. பெரியார் எனும் பேரொளி
4. பெரியார் வாழ்வியலில் கருத்துப்போர்
5. பெண்ணுரிமை நோக்கில் பெரியாரின் இதழ்கள்
6. ஆதித்தனாரின் இதழியல் மேலாண்மை
7. தெ.பொ.மீ.,யின் சமயம்
8. இவர் தாம் பெரியார்
9. சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள்
10. பெண்களும் சட்ட உரிமைகளும்
11. குறுந்தொகையில் ஓரெழுத்து பொருள்நுட்பம்
12. தற்காலத் தமிழ் உருபன்கள்
13. சூரசம்மாரக் கூத்து
14. புதுக்கவிதைகளில் பெரியாரியம்
15. காமராசரின் ஆளுமை
16. எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள்
17. சி.ஆர்.ரவீந்திரன் புதினங்களில் உத்திகள்
18. வரலாற்றியல் நோக்கில் கபிலர் பாடல்கள்
19. பரிபாடலில் ஆன்மிகமும் உலகியலும்
20. எல்லோருக்கும் உரியார்:அவர்தான் பெரியார்
21. சிறுபஞ்சமூலம் புலப்படுத்தும் வாழ்வியல் சிந்தனைகள்
22. மட்டக்களப்புத் தமிழகத்தில் வள்ளியம்மை

ஒருங்கிணைப்பாளராக நடத்திய பன்னாடு மற்றும் தேசியக் கருத்தரங்கங்கள் : 45
தமிழ்நாடு அரசின் நிதிநல்கையுடன் நடத்தியவை : 5
தமிழ்நாடு அரசின் நிதிநல்கையில் மேற்கொள்ளப்பட்டப் பெருந்திட்ட உயராய்வுப் பணிகள் : 3
கட்டுரைகள் : 145
பன்னாடு மற்றும் தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகள்: 99
(ISBN பன்னாட்டுத்தர புத்தக எண்ணுடன்)
சமூகம், மொழி, இலக்கியம், கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம் சார்ந்து எழுதப்பட்டவை : 46 (ISSN பன்னாட்டுத்தர வரிசை எண்ணுடன்)
(உங்கள் நூலகம், திணை, தமிழியல், தமிழ்ப்பொழில். கணையாழி, காக்கைச் சிறகினிலே, சன்லாக்ஸ், முத்துக்கமலம், மணற்கேணி, ஆய்வுச்சுடர், செந்தலைக்குருவி, தமிழ்மொழி மற்றும் தமிழிலக்கியம் பன்னாட்டு ஆய்விதழ்(IJTLLS), இந்திய ஆய்விதழ், ஆய்த எழுத்து போன்ற ஆய்வு இதழ்களில் எழுதியவை)