IVAL BHARATHI

இவள் பாரதி

Profession எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், பதிப்பாளர்

Biography

ஆசிரியர் குறிப்பு

சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி ‘புதிய தலைமுறை’யில் உதவி ஆசிரியராகவும், ‘புதிய தலைமுறை பெண்’ பத்திரிகையில் பொறுப்பாசியராகவும்  பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர்.

நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியை நடத்தி வருகிறார். நம் பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 6 வருடங்களில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். முதல் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், குழந்தைப்  படைப்பாளர்களின் படைப்புகளை வெளிக்கொண்டுவருவதும் முக்கிய பணியாகும். அத்துடன் மொழிபெயர்ப்பு நூல்களிலும் கவனம் செலுத்துகிறார்.

இதுவரை முதல் தலைமுறை எழுத்தாளர்கள் 60 பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர்களது நூல்களை திருமிகு. வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிவண்ணன் குறித்த நூலை நடிகர் சத்யராஜ் அவர்கள் தலைமையேற்று வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.  திண்டுக்கல் முன்னால் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்ட பிரபலங்களின் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.

துருக்கி, ப்ரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழுக்கு நூல்களை மொழியாக்கம் செய்து பதிப்பித்துள்ளார்.

நம் பதிப்பக நூல்களும் என் வழி விண்வெளி மலையாளத்திலும், குட்டிமோச்சு எனும் சிறார் நூல் மலாய் மொழிக்கும், ஆறு நண்பர்களின் கதை என்கிற சிறார் வண்ணப் புத்தகம் பெங்கால் ஆகிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. அதுமட்டுமின்றி Flying fruits, Jeebppmba and the Butterfly, Kuttimochu, Yellow egg உள்ளிட்ட குழந்தைகளுக்கான நூல்கள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன.

The Story of Six friends (ஆறு நண்பர்களின் கதை), Talking Clock (பேசும் கடிகாரம்), Return to the Magic tree (மீண்டு வந்த மந்திர மரம்) ஆகிய நூல்கள் தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து இருமொழி நூல்களாக வந்துள்ளன. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டவை.

தமிழகத்தில் இருந்து சர்வதேச அளவில் நடைபெறும் முக்கியப் புத்தகக் காட்சியான ப்ராங்க்பர்ட் புத்தகக் காட்சிக்கு சென்று வந்த முதல் பெண் பதிப்பாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு. அதுமட்டுமின்றி ஜார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சிக்கும்  சென்று வந்தவர்.  புதுதில்லி சர்வதேச புத்தகக் காட்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சென்று வருகிறார்.
சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சிக் குழுவில் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டியில் இருந்திருக்கிறார்.

ஜெய்ப்பூர் புத்தகக் காட்சிக்கு அழைப்பின் பேரில் சென்று தமிழ்ப் பதிப்புலகில் பெண்கள் என்கிற தலைப்பில் அரங்க விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் பங்கேற்று வருகிறது இவரது நம் பதிப்பகம். சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, விழுப்புரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அந்தமான் என தொடர்ந்து புத்தகக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர்களிடையே ஊக்கப்படுத்தியும், வாசிப்பு குறித்தும், எழுத்து குறித்தும், உடல் மற்றும் மனம் இயங்கும் விதம் குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும், மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்தும் பேசியும், எழுதியும் வருகிறார்.  

இதுவரை கவிதை, சிறுகதை, நேர்காணல், சிறார் இலக்கியம், மொழியாக்கம் என 60க்கும் மேற்பட்ட  நூல்கள் எழுதியிருக்கிறார்.

இதுவரை வெளியான நூல்கள்
கவிதை நூல்கள்
1. களவு போன கனவு
2. கணவன் காதலன் தோழன்
3. சில தேன் துளிகளும் எறும்புகளும்
4. நீ மிதமாக நான் மிகையாக
5. நான் சொல்வதெல்லாம்
6. வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்
7. ப்ரியங்களின் அந்தாதி
8. சிறுகை அளாவிய கூழ்
9. சொற்களின் வாசனை
10. மற்றவை நேரில்
11. சந்திப்பின் முன்னும் பின்னும்
12. கூறியது கூறல்
13. தவிர்க்க இயலாத காரணத்தால்
14. ஆற அமர
15. மருந்தாளனே
16. நீயின்றி அமையாது உலகு
17. தீராத உரையாடல்
18. தனிமையின் தீண்டல்கள்
19. தகித்தலையும் நேசம்
20. காதலின் கடவு(ள்)ச் சொல்
21. சட்டென்று மாறுது வானிலை
22. மயக்குறு சொற்கள்
23. நல்லிரவாகுக நன்னெஞ்சே
24. இன்னிசை அளபெடையே அமுதே
25. நில் கவனி செல்லாதே
26. நிறம் மாறும் புத்தன்
27. இவள் பாரதி கவிதைகள் பாகம் 1 (2002 – 2022)
28. இவள் பாரதி கவிதைகள் பாகம் 2 (2023 – 2025)
29. நீ நான் பிரபஞ்சம்

கட்டுரை நூல்கள்
30. கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்
31. எப்படி?
32. குழந்தை சூழ் உலகு

சிறார் இலக்கியம்
33. குட்டிமோச்சு
34. குட்டிமோச்சும் உயிரினங்களும்
35. மீண்டு வந்த மந்திர மரம்
36. பெட்டியில் பூட்டப்பட்ட கதைகள்
37. குட்டிமோச்சும் ஓவியங்களும்

நேர்காணல்கள்
38. இவள் சந்தித்த இவர்கள் – முதல் பாகம்
39. தத்துவம் சித்தாந்தம் – பிரபஞ்சன்
40. மண் உயிர் இயக்கம்: நம்மாழ்வார் – நேர்காணல்
41. இவள் சந்தித்த இவர்கள் – இரண்டாம் பாகம்
42. இவள் சந்தித்த இவர்கள் – மூன்றாம் பாகம்
43. வயிறும் உண(ர்)வும் – அ. உமர்பாரூக் நேர்காணல்
44. உடலும் மனமும் அறிந்ததும் அறியாததும் –
     (அ. உமர்பாரூக் நேர்காணல்)
45. அக்குபங்சர் அறிந்ததும் அறியாததும் –
   (போஸ் கே. முகமது மீரா நேர்காணல்)

சிறுகதை
46. சுதந்திரம்

மொழியாக்க நூல்கள்
47. த்ரிஷ்யம் – காட்சிப்படுத்துதலின் மகிமை
48. த்ரிஷ்யம் 2 – வெளிப்படுத்துதலின் மகிமை
49. த்ரிஷ்யம் 3 – தியானத்தின் மகிமை
50. த்ரிஷ்யம் 4 – தசை நினைவாற்றலின் மகிமை
51. பேக்கரி தொழில்: வெற்றி பெறும் உத்திகள்
52.. சிறப்பு ஆலோசகர்: அரசியல்
   அதிகாரத்தின் கலங்கரை விளக்கம்
53. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்குத்
   தயாராவது எப்படி?
54.. ஜவுளித் தொழில்: வெற்றி பெறும் உத்திகள்
55. துணிச்சல்: துணிவே வெற்றி
56. வயிற்றுப்போக்கு: பரிவ்ராஜக தீர்வுகள்
57. போர்த் தொழில் பழகு
58. தீங்கியல் சட்டம்
59. ஞானியே, ஞானியே, என்ன தந்தீர்?
60. மியூசிக் டைரக்டர்
61. நான் யார்? நான் யார்?
62. கணிணி அடிப்படை அறிவியல்

புதிய சிறார் படைப்புகள்
63. நொடியே நொடியே எங்கிருந்தாய்
64. நீல வானக் குளத்திலே