| Profession | கவிஞர் |
|---|
சௌந்தரபாண்டியன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் மற்றும் புனைவெழுத்தாளர்.
தியாகு என்ற ஆளுமையின் சிறை அனுபவங்களை எழுதத் தூண்டியதன் மூலம் ‘சுவருக்குள்
சித்திரங்கள்’, ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ போன்ற புகழ்பெற்ற சிறை இலக்கியத் தொடர்கள்
உருவாக இவர் முக்கியக் காரணமாக இருந்தார்.
உசிலம்பட்டி பகுதியில் நிலவி வந்த கொடூரமான பெண் சிசுக்கொலைச் சம்பவங்களை முதன்முதலில்
களஆய்வு செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
சிறந்த படைப்பு: சீவலப்பேரி பாண்டி