| Profession | தமிழ் ஆர்வலர், தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், தமிழ் அமைப்புகள் |
|---|
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
VISWANAATH T. M.
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தமிழர் வரலாறு, தொல்லியல், தமிழியல், பண்பாட்டு ஆய்வு, பத்திரிகையியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிர்வாகி ஆவார்.
அவர் “தமிழ் ஊடகம் (Tamil Oodagam)” இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியராக செயல்பட்டு, வரலாறு, தொல்லியல், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சமூக நீதி, தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தரமான செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.
மேலும், “தமிழியல் நடுவம்” அமைப்பின் நிறுவனராக, தமிழ்மொழி, தமிழர் வரலாறு, உலகத் தமிழர் நாகரிகம், சித்தர் மரபு, தொல்லியல் மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பத்திரிகைத் துறையில் 26 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றை பதிவு செய்யும் பணியில் தனித்துவமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக தமிழர் நாகரிகம், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உலகத் தமிழர் தொடர்புகள், சித்த மருத்துவம் மற்றும் பண்பாட்டு மரபுகள் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, “உலகளாவிய தமிழர் நாகரிகம்” என்ற விரிவான ஆய்வு நூலை உருவாக்கி வருகிறார். தொல்லியல், வரலாறு, மொழியியல், இலக்கியம், மானுடவியல் மற்றும் மரபணு ஆய்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த நூல், உலகளவில் தமிழர் நாகரிகத்தின் பரவலை ஆதாரங்களுடன் விளக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இவர் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் வாயிலாக தமிழர் வரலாற்றையும் அறிவியல் சிந்தனையையும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 1999 ம் ஆண்ட சேலம் கலைக்கதிர் நாளிதழில் தமது இதழியல் பணியைத் தொடங்கி, ஜெயா தொலைக்காட்சி செய்திப்பிரிவில் ஏழு ஆண்டுகள், புதிய தலைமுறைத் தொலைக் காட்சியில் ஏழு ஆண்டுகள், சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஐந்தரை மாதங்கள் என செய்தியாளர் தொடங்கி செய்தி உள்ளீட்டு ஆசிரியர், மூத்த ஆசிரியர் ஆகிய பொறுப்புகள் வகித்தவர்.