மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் மனுஷ்யபுத்திரன். இவருடைய
எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும்
நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்கவேண்டிய கடமை எழுத்தாளர்களின்
குரலுக்கு இருக்கிறது. அதனை மிகச் சரியாகவே நிறைவேற்றி வருகிறார். சிறந்த
கவிஞராகவும் நிகழ்ந்து வருகிறார். இவருடைய எழுத்துகளில் உண்டான படைப்புகள் வருமாறு:

1. என்ன மாதிரியான காலத் தில் வாழ்கிறோம், 2. டினோசர் கள் வெளியேறிக் கொண்டிருக்
கின்றன, 3. தோன்ற மறுத்த தெய்வம், 4. எதிர்க்குரல், 5. இந்தி யர்களின் போலி மனசாட்சி,
6. நிழல்கள் நடந்த பாதை, 7. குற்ற மும் அரசியலும், 8. கைவிட்ட கொலைக்கடவுள்,
9.நிழல்களோடு பேசுவோம்.

இவருடைய படைப்புகளில் சாதாரண மக்களுக்கு ஆதரவாகவே குரல் எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அது வலிமை பெறுகிறது. மக்களின்
கோபதாபங்களையும், நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும்
பிரதிபலித்துள்ளன.

‘என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்’ என்ற நூலில், மன்னராட்சிக் காலத்தில் மக்களின்
பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு சுதந் திரமாக இருந்தார்கள். ஆனால், சுதந்திரம்
பெற்று இன்றைய மக்களாட்சிக் காலத்தில் தேவையான எவையும் கிடைக்கப் பெறாமல் உரிமைகள்
பறிக்கப் படுகின்றன என்பதை விவரித்துள்ளார்.

‘தோன்ற மறுத்த தெய்வம்’ நூலில், காதல் கலப்புத் திருமணங்கள், ரியாலிட்டிஷோ, பதிப்புத்
துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களிலான இவரது கட்டுரைகள் இடம்பெற் றுள்ளன.

‘டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின் றன’ நூலில், டினோசர்களை யார் உருவாக்கி
வளர்த்தார்களோ, அவர்களையே அது வேட்டையாடுகிறது. அதை போலத்தான் மக்களால் தேர்ந்
தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வாறெல் லாம் விதம் விதமான மிரட்டி மக்களைப் பயம் கொள்ளச்
செய்கின்றனர் என்பதை விவரிக்கிறது.

‘எதிர்க்குரல்’ கட்டுரைகள், பிரச்னைக்கு எதிராக மக்கள் மனத்தைரியத்துடன் எதிர்க்குரல்
எழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்து கிறது.

‘இந்தியர்களின் போலி மனசாட்சி’ கட்டுரைகள், ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் அவர்களின்
தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுடன், மக்களின் கடமை எதுவென புரியவைக்கிறது.

‘குற்றமும் அரசியலும்’ நூலில், சாதிய அரசியலினால் ஏற்படும் மோதல்களையும், அதனால்
ஏற்பட்ட கலவரங்களையும் கடுமையாகச் சாடுகிறது. மேலும், பல்வேறு விதமான ஊழல்கள், மற்றும்
மக்களின் அன்றாடத் தேவைகள், பிரச்சினைகள் ஆகிவற்றை தெள்ளத் தெளிவாக இந்நூல்
விவரிக்கிறது.

இவ்விதமே இவரது மற்ற நூல்களும் உரத்துப் பேசுகின்றன.