| Profession | எழுத்தாளர் |
|---|
திருவண்ணாமலையில் எம்.தனக்கோட்டி – தனம் அம்மாள் இணையருக்கு 27.09. 1965-இல் பிறந்தார்.
திருவண்ணாலைக்கு அருகிலுள்ள அண்ணாமலைபுரம் அரசினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடக்கக்
கல்வியையும், சாரோன் போர்டிங் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், மேல்நிலைக் கல்வியை
டேனிஷ் மிஷன் பள்ளியிலும் கற்றார்.
கல்லூரியில் இள வணிகவியல் பயின்றார். அக்காலத்தில் நண்பர்களுடன் பழகியதைவிட பற்பல
புத்தகங்களுடன் பழகினார். பல்வேறு கருத்தரங்குகள், மேடைப் பேச்சுகளில் பங்கேற் றார்.
இளமையிலேயே வாசிக்கும் பழக்கம் மிகுதியாகக் காணப்பட்டதால் கல்லூரிக் காலத்திலேயே எழுதத்
தொடங்கினார்.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அரசுப் பணி கிடைத்தது. மின்சார வாரியத்தில் உதவி
நிர்வாக அலுவலராக பணியைத் தொடர்ந்தார்.
1994-இல் ஷைலஜாவுடன் இல்லறச் சோலையில் இணைந்தார். ‘வம்சி’ என்றொரு மகன், ‘மானுஷி’
என்றொரு மகள்.
‘முற்றம்’ எனும் மாதக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழகத்திலுள்ள முக்கிய கலை,
இலக்கியவாதிகளை வரவழைத்து அவர் களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்கிறார். ‘வம்சி’
எனும் பதிப்பகத்தைத் தொடங்கி, 400-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு உள்ளார்.
‘சிறகிசைத்த காலம்’, ‘நட்சந்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’, ’19 டி.எம். சாரோனி
லிருந்து’, ‘எல்லா நாளும் கார்த்திகை’ ஆகியவை இவரது நூல்கள்.
‘எல்லா நாளும் கார்த்திகை’ என்னும் நூலுக் காக, தமிழக அரசின் விருது உட்பட பல விருது
களைப் பெற்றுள்ளார். ‘முகம்’ சிறுகதை இலக்கியச் சிந்தனை விருதைப் பெற்றுள்ளது. இவரது
நூல்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் போன்றவற்றில்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட் டுள்ளன.
‘பவா என்றொரு கதைசொல்லி’ என்றொரு ஆவணப்படத்தை ‘காஞ்சனை’ ஆர். ஆர். சீனி வாசன்
இயக்கத்தில், வலைப் பதிவாளரான ‘செந் தழல்’ ரவி தயாரித்துள்ளார்.
சுமார் 25 வருடங்களாக தமுஎச.வில் செயல் பட்டிருக்கிறார். பல வருடங்களாக திருவண்ணா
மலையில் தமுஎச. மூலம் இலக்கியக் கூட்டங்கள், கலை இரவுகள், கருத்தரங்குகள், புத்தக அறி
முகங்கள், நவீன நாடகங்கள் என அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நண்பர்
கருணாவுடன் ஒருங்கிணைத்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்
பினராக கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளார். பவாவும் அவரது நண்பர் எஸ்.கே.பி.கருணாவும்
சேர்ந்து ‘டயலாக்’ என்றொரு கலை இலக்கிய சமூக உரையாடல் மையத்தைத் தொடங்கி சிறப்பாக
நடத்தி வருகின்றனர்.