முனைவர் கோ.விசயராகவன்

முனைவர் கோ.விசயராகவன்

Profession அறிஞர்

Biography

தொண்டை மண்டலம், பழையனூர் கும்பம் கண்டிகையில் சொ.க.கோவிந்தசாமி – சின்னம்மாள்
தம்பதியருக்கு 09.02.1965 அன்று பிறந்தார்.

குப்பம்கண்டிகை ஊராட்சி ஒன்றியபள்ளியிலும், சென்னை பாரிமுனை பச்சையப்பன் அறக் கட்டளை
கோவிந்தப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அரக்கோணம், தென்னிந்தியத் திருச்சபை நடுநிலைப்
பள்ளியிலும் பள்ளிக் கல்வியைக் கற்றார்.

மாநிலக் கல்லூரியில் வேதியியலில் இளநிலைப் பட்டமும், காஞ்சியில் அறிஞர் அண்ணா கூட்டுறவு
பயிற்சி நிலையத்தில் ‘கூட்டுறவு மேலாண்மை’யில் பட்டயமும், புதுக் கல்லூரியில் தமிழில்
முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேரா. ம.செல்வராஜ் நெறியாள்
கையில் ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் பேரா.பொன்.செல்வகணபதி
நெறியாள்கையில் ‘முனைவர்’ பட்டமும் பெற்றார்.

1992 – 96இல் சென்னை எஸ். ஆர். எம். குழுவைச் சார்ந்த நைட்டிங்கேல் பள்ளியில்
தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். அப்பள்ளியில் ‘தமிழ் மன்றம்’ தொடங்கினார். பல்வேறு அறி
ஞர்களை அழைத்து சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தார். மாணவர்களுக்காக ‘மாணவர் குரல்’
என்றொரு திங்களிதழைத் தொடங்கினார். 1997-இல் இதே நிர்வாகத்தில் இயக்கும் கலை அறிவியல்
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார்.

கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார் என்பது
இவரது கூடுதல் சிறப்பு. இந்நிலையில், வேலைவாய்ப்பகம் மூலம் தமிழ் வளர்ச்சித்துறையின்
உதவி இயக்குநராக நாகை மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். இரண்டு வருடங்களில்
காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார்.

2012-இல் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியில் அமர்ந்தார். அப்பணியில்
தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஆய்வரங்கம், கருத்தரங்கம், திட்டப் பணி என்று தொடர்
செயற்பாடுகளை முறைப்படுத்தி இயக்குவதில் வல்லமை பெற்றிருக்கிறார். பத்து நூல்களுக்கு
மேல் பதிப்பித்துள்ளார்.

மேலும், 2012 முதல் தமிழிலக்கியம் மற்றும் சுவடிப் புலத்தில் பேராசிரியராகப்
பொறுப்பேற்றும், 2012 முதல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்று
ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும் செயலற்¢றுகிறார்.

‘பாரதிதாசனும் தன்மான இயக்கமும்’, ‘சமூக நாட்குறிப்புகள்’, ‘சங்க இலக்கியங்கள்: ஓர்
ஆய்வு’, ‘தலைவனா? தத்துவமா?’, ‘நான் படித்தேன் காஞ்சியிலே’, ‘இனமுரசின் இடிமுழக்கம்’
ஆகிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். ‘சீசன் பால்கு வின் தமிழ்ப்பணி’, ‘சுஜாதாவும்
சிறுகதையும்’, மலேசியாவில் தமிழ்க்கல்வி’ உள்ளிட்ட ஆறு ஆய்வுக் கட்டுரைகளையும்
வழங்கியுள்ளார்.