| Profession | அறிஞர் |
|---|
திண்டுக்கல் பாலப்பநாயக்கன்பட்டியில் சி.இராமசாமி – பாப்பா தம்பதியருக்கு 1963-இல்
பிறந்தார்.
துரைகமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மதுரை யாதவா கல்லூரியில்
தமிழ் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும்,
பேராசிரியர் மோ. இசரயேல் நெறிகாட்டுதலில் ‘சேனாவரையர் உரைநெறி’ என்ற ஆய்வேட்டை
பணித்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் எஸ்.
ஆரோக்கியநாதன் நெறியாள் கையில் ‘தொடர்மொழி இலக் கண அடிப்படைகள்’ என்ற ஆய்வேடு வழங்கி
முனைவர் பட்டமும் பெற்றார்.
சென்னையிலுள்ள ‘மொழி அறக்கட்டளை’யில் ஒன்பது மாத காலம் தமிழ்மொழியை கணிப்பொறியில்
புகுத்தும் திட்டம் தொடர்பான ஆய்வுப் பணியில் (முனைவர் வ.ஜெயதேவன் பேருதவியுடன்)
பணியாற்றினார்.
தன் சொந்த ஊருக்கு அருகிலுள்ள அருள்மிகு பழனியாண்டவர் பண்பாட்டுக் கல்லூரியில் ஏழு
ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றினார். பின்னர் பாரதியார் பல்கலைக் கழக தமிழியல் துறையில்
தேர்வுநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி, தற்பொழுது திருவள்ளுவர்
பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நெறிகாட்டுதலின்படி இருபத்து ஐவர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஐவர் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளனர். 32 மாணவர்களுக்கு ஆய்வேடு பணிப்பதற்கான வழி காட்டியாக
செயலாற்றியுள்ளார்.
தாம் பணியாற்றிய தமிழ் அமைப்புகள், மன் றங்கள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்
கழகங்களில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் செம்மொழி நிறுவனம் சார்பில் மாநிலம் முழுமையயும் நடைபெற்ற
பயிலரங்குகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று ஆய்வுரை வழங்கியுள்ளார்.
இந்தி, ஜப்பான் மொழிகளில் பட்டயம் பெற்றுள்ளார்.
ஆறு நிறுவனங்களில் பாடத்திட்ட குழு உறுப்பினராக உள்ளார். வினா வங்கி உருவாக்கும்
குழுவில் மூன்று பல்கலைக் கழகங்களில் உறுப்பினராகவும் உள்ளார். பல்கலைக்கழக தேர்வுப்
பிரதிநிதியாக மூன்று முறை பங்கேற்று நடத்தியுள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளவை குழு உறுப்பினராக மூன்று ஆண்டுகள் செயலாற்றியுள்ளார்.
கல்லூரி முதல்வர் தேர்வுக் குழு, பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் தேர்வுக்குழு
ஆகியவற்றில் உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.
பல நிறுவனங்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.