| Profession | எழுத்தாளர் |
|---|
காரைக்காலில் இராமசாமி -ஜோதி தம்பதியருக்கு 07.03.1962 அன்று பிறந்தார். இயற்பெயர்
கலைச்செல்வி. இவரது பெயரின் முதல் இரண்டு எழுத்துகளையும், இவரது கணவர் பெயரான
விசுவலிங்கத்தின் முதல் இரண்டு எழுத்துகளையும் இணைத்து ‘கலாவிசு’ என்று
புனைபெயராக்கிக் கொண்டார்.
இவர்களுக்கு கார்த்திக், அம்ரிதா என இரு குழந்தைகள். திருமணத்திற்குப் பிறகு
புதுச்சேரியில் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு உடல், மனச் சிக்கல்களுக்கு உள்ளான இவர் 9-ஆம் வகுப்போடு படிப்புக்கு முற்றுப்
புள்ளி வைக்கப்பட்டார்.
பொதுவாக, தமது வாழ்க்கை நிகழ்வுகளை, எண்ணங்களை யாருடனும் பேசாமல், எழுதி வைத்துக்
கொள்வதை இயல் பாகக் கொண்டவர் கலாவிசு.
இக்குணமே இவர் எழுத்தாளராவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
“இராவணன் விரும்பியதால் | சீதைக்குத் தீ என்றால் | சூர்ப்பனகையின் காமத்திற்கு ஆளான |
இராமனுக்கு என்ன தண்டனை? | யார் கொடுப்பது?” இது கலாவிசுவின் தொடக்க காலக் கவிதை.
இவர் ராணி, பாக்யா, ராணி முத்து, வார மலர் போன்ற இதழ்களில் கவிதைகள், கட்டு ரைகள்,
சிறுகதைகள் எழுதினார். வானொலி, தெலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.
பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணி யாற்றி வருகிறார்.
இவரது படைப்புகள் நான்கு கவிதை நூல்கள், ஒரு மழலையர் பாடல் நூல், ஒரு கதைப் பாடல்
நூல், ஒரு கட்டுரைத் தொகுதி, மூன்று சிறுகதைத் தொகுதிகள் என வெளிவந்துள்ளன.
இளம் கவிஞர்களுக்காக ‘புதுவை கவிதை வானில்’ எனும் மாத இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக
நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் படகுக் கவியரங்கம், ஓடும் ரயிலில் கவியரங்கம்,
மாமல்லபுரத்தில் கவியரங்கம், கண் தானம், உடல்தானம், இரத்ததானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு
போன்ற விழிப்புணர்வுக் கவியரங்கங் களை நடத்துவதுடன், ஆண்டுதோறும் இது வரை 150
சாதனையாளர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார்.
கலாவிசுவின் எழுத்தையும் சேவையையும் பாராட்டி பல்வேறு அமைப்புகள் ‘புதுவைக்குப் புகழ்
சேர்த்த பெண்மணி’, ‘சிறந்த சேவகர்’, ‘சேவைச்சுடர்’, ‘சிகரம் தொட்ட பெண்மணி’,
‘கவிச்சுடர்’, ‘பாவேந்தர் பற்றாளர்’, ‘கனித்தமிழ் கவிச்சோலை’, ‘சேவைத் திலகம்’.
‘சிறுகதை சித்தர்’, ‘தமிழ்த் தோன்றல்’ ‘சைவ சித்தாந்த இரத் தினம்’, ‘மகளிர் திலகம்’,
‘வாழ்நாள் சாதனை யாளர்’ , இலக்கியச்சுடர்’, ‘இலக்கியத் தென்றல்’ ஆகிய பட்டங்களுடன்
‘ராகுல் காந்தி விருது’, ‘மகாகவி பாரதியார் விருது’, ‘மகளிர் தின விருது’,
‘கவிஞர் தின விருது’, ‘தியாகி சுப்பிரமணிய சிவா விருது’, அன்னை தெரசா விருது,
எழுத்தாளர் லட்சுமி விருது’ போன்ற விருதுகளையும் வழங்கப் பெற்றுள்ளார்.