முனைவர் சந்திரா கிருட்டிணன்

முனைவர் சந்திரா கிருட்டிணன்

Profession அறிஞர்

Biography

கன்னியாகுமரியில் 1961-இல் பிறந்தார். தந்தை அ.சிவதாணு, தாயார் சி.மீனாட்சி.

புதுமுக வகுப்பை பி.எஸ். ஜி.ஆர். கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரியில் படித்த இவர்,
கோவை தவத்திரு சாந்த லிங்க அடிகளார் கல்லூரியில் பி.லிட். (தமிழ்), எம்.ஏ. (தமிழ்
இலக்கியம்), எம்.ஃபில், பிஎச்.டி. என பட்டப் படிப்பு படித்தார்.

‘கோவைகிழாரின் தெய்வங்களின் புலம்பல்: ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டத்தையும்,
‘தொல்காப்பியம் செய்யுளியலும் யாப் பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில்
பிஎச்.டி. பட்டத்தையும் பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1990-இல் பி.எட். பட்டத்தையும், 1997-இல்1989-இல், கோவை
பெரியநாயக்கன் பாளையத்தில் இமாகுலேட் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக தனது பணியைத்
தொடங்கினார்.

1993- 1994இல் கோவை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றி, 1995-இல் கோவை நிர்மலா
மகளிர் கல்லூரியில் பேராசிரியை பணியைத் தொடங்கினார். கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள்
கலை அறிவியல் துறைத் தலை வராக 11 ஆண்டுகள் பணியாற்றி 2007-2010இல் எல்.ஆர்.ஜி.
மகளிர் கல்லூரியில் பணியாற்றினார்.

2010-இல் அரசுப் பணியில் சேர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில்
பேராசிரியையாகப் பணியைத் தொடர்கிறார்.

இவரது வழிகாட்டுதலில் நால்வர் எம்.ஃபில் பட்டமும், ஒருவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

சந்திரா கிருட்டிணன் ‘கதிர் நோக்கும் கவின் மலர்’ (2004), ‘நகை என்னும் மெய்ப்பாடு’
(2006), ‘பன்முகப் பார்வைகள்’ (2009), ‘சுகம் தரும் சுக பிரம்மர்’ (2012) ஆகிய ஐந்து
நூல்களை எழுதி யுள்ளார்.

கோவை ஞானி தொகுத்த ‘உழவு மாடுகள்’ (2002) எனும் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத்
தொகுதியில் இவரது ‘விடிந்தால் தீபாவளி’ இடம்பெற்றுள்ளது. அவரே 2003இல் தொகுத்த
‘புதிய ஏவாள்’ எனும் சிறுகதைத் தொகுதியில் இவரது ‘ஆசை ஆசையாய்’ இடம் பெற்றுள்ளது.

இவருடைய படைப்புகள் கோழிக்கோடு பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பெரியார்
பல்கலைக் கழகம், கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை பார்க் கல்லூரி, கோபி கலை
அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி, கோவை அரசு கலைக் கல்லூரி
ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

இவர்தம் ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் பத்து, தேசிய அளவிலான
கருத்தரங்குகளில் இருபத்தைந்து, மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத் தரங்குகளில்
நூற்றுக்கும் மேற்பட்டவை என சமர்ப்பித்துள்ளார்.