| Profession | எழுத்தாளர் |
|---|
திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம் – கல்யாணசுந்தரி தம்பதியர்க்கு 05.01. 1956-இல்
பிறந்தார். 12-ம் வகுப்புவரை திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப்
படிப்பை திரு வண்ணாமலை அரசு கல்லூரியிலும் பயின்றார்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். 1979-இல்
தஞ்சாவூரில் த.மு.எ.ச நடத்திய மூன்று நாள் நாடக விழாவில் சில நண்பர்களுடன் இணைந்து
இரண்டு நாடகங்களை நடத்தினார். கல்லூரிக் கல்வி முடிந்தபின் பிரேம் சந்தின் ‘ராஜினாமா’
எனும் சிறுகதையை நாடகமாக்கினார். சோசலிச வாலிபர் முன்னணி மாநாட்டில் ‘இந்தியா என்
தாய் நாடு’ எனும் நாடகத்தை அரங் கேற்றினார். திருவண்ணாமலையில் ‘வான வில் பிலிம்
சொசைட்டி’யைத் தொடங்கினார். 1978-1984 காலகட்டத்தில் தமிழகத்திலுள்ள எல்லா
மாவட்டங்களுக்கும் சென்று கவிதை வாசித்தார். கம்ப்யூட்டர் படிப்பதற்காக சென்னைக்குச்
சென்றவர், ‘புரோகிராமிங்’ படித்துவிட்டு சில நாடக முயற்சிகளில் ஈடுபட்டார்.
1984-இல் ‘சென்னைக் கலைக் குழு’வைத் தொடங்கினார். பாதல் சர்க்காரின் கோட்பாடு களை
உள்வாங்கிக்கொண்டு வீதி நாடகங்களை இயக்கத் தொடங்கினார். பேரா. இராமானுஜம், பிரசன்னா
(கர்நாடகா) போன்றோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர்தம் ‘சென்னைக் கலைக்குழு’வின்
மூலமாக ஏறத்தாழ 45-க்கும் மேற்பட்ட மேடை மற்றும் வீதி நாடகங் களை உருவாக்கி
நிகழ்த்தியுள்ளார்.
அரசுடன் இணைந்து அறிவொளி இயக்கம், பெண் சிசுக்கொலைக்கு எதிரான இயக்கம், பெண் சமத்துவம்,
பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கம், தாய்சேய் நலம் போன்ற திட்டங்களுக்காக நாடகம்
நடத்தியிருக்கிறார். புதுச்சேரி நிகழ்கலைத் துறை, புதுதில்லி ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப்
டிராமா’ , கல்வியியல் அரங்கு, கர்நாடகா டி.வி.எஸ். பள்ளிகள் ஆகியவற்றோடு இணைந்து
பல்வேறு தளங்களில் செயலாற்றியுள்ளார்.
1989-1994 காலகட்டத்தில் ‘மக்கள் எழுத்தறிவு இயக்க’த்துக்காக 13-க்கும் மேற்பட்ட வீதி நாட
கங்களை உருவாக்கி தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவு போன்ற
இடங்களிலும் நிகழ்த்தியுள்ளார். 1983-இல் ‘சமத்தா’ என்ற அமைப்புடன் இணைந்து பெண்களுக்கான
விழிப்புணர்வு நாடகங்களை உருவாக்கியுள்ளார். இந்திய அளவில் மட்டு மல்லாமல், இலங்கை,
நார்வே, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று நாடகங்களை உருவாக்கி மேடையேற்றியுள்ளார்.
இவரது ‘பவுன்குஞ்சு’ நாடகம் தெலுங்கில் ‘பங்காரு பீட்டா’ என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டு
நல்ல வரவேற்பையும் விருதையும் பெற்றது.
‘சந்தேகி’ (கவிதைத் தொகுப்பு), உபகதை (வீதி நாடகம்), இலக்கம் நான்கு பிச்சுப்பிள்ளைத்
தெரு விலிருந்து (நேர்காணல்), கல்வியில் நாடகம் ஆகியவை இவரது நூல்கள். ‘லிஸ்டம்’
ஆங்கில நாளிதழின் ‘சிறந்த இயக்குநர்’ விருதையும், ‘நாடகச் சிற்பி’ விருதையும்
பெற்றுள்ளார்.