| Profession | எழுத்தாளர் |
|---|
இராமநாதபுரம் ரெத்தினம் பிள்ளை – சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு 03.01.1956 அன்று
பிறந்தார். இயற்பெயர் குமரவேலு. பள்ளியில் ரெ. குமரன்.
1982-இல் திருவாடனையில் கூட்டுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். 1983-இல் அவரது
அத்தை மகள் திலகவதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராதிகா, அருண்குமார் என இரு
குழந்தைகள்.
‘தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத்துறை அலுவலர் சங்கம்’, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’
ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இணைந்து
‘அனைத்திந்திய முற் போக்கு எழுத்தாளர் சம்மேளனம்’ தொடங்கினார். பயிற்சி முகாம் நடத்தினர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுத்துகள் மீது கொண்ட ஈர்ப்பினால் தன்னை ‘ஜெயகாந்ததாசன்’ என
அடையாளப் படுத்திக்கொண்டார். அப்பெயரைச் சுருக்கி ‘ஜெகாதா’ என்று வைத்துக் கொண்டார்.
சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இறுதியாண்டு படிக்கும்போது இவர்
எழுதிய ‘ஒரு நிழல் தயாராகிறது’ எனும் முதல் சிறுகதை ‘முகவை முரசு’ இதழில் வெளி
வந்தது. ‘சமுத்திரக் குமாரர்கள்’ இவரது முதல் புதினம். கடலில் சங்கு குளிக்கும்
தொழிலாளர் களின் நூறாண்டு போராட்ட வாழ்வே களம்.
நக்கீரன் வெளியீடுகளான ‘ஓம் சரவண பவ’, ‘இனிய உதயம்’, ‘பாலஜோதிடம்’ போன்ற இதழ்களில்
இவரது கட்டுரைகளும் தொடர் கதைகளும் மொழிபெயர்ப்புகளும் வெளிவந்துள்ளன. ‘ஓம் சரவண பவ’
மாத இதழின் இலவச இணைப்பாக ஜெகதாவின் 300 பக்க ‘மகா பாரதம்’ நூல் வெளிவந்தது.
‘நக்கீரன்’ வெளியீடாக 70க்கும் மேற்பட்ட நூற்கள் வெளி வந்துள்ளன.
இதுவரை 31 சிறுகதைத் தொகுதிகள், 5 குறு நாவல்கள், 9 நாவல்கள், 7 தொடர்கதைகள் , 9
மொழிபெயர்ப்புகள், 6 நாடகங்கள், 1 இசை நூல், 6 திரைத்துறை, 24 வரலாறு, 17 ஆன்மீகம், 7
இலக்கிய ஆய்வு, 7 இஸ்லாமிய இலக்கியம், 1 சட்டம், 2 கணினி, 2 விளையாட்டு, 14 பொது,
54 சித்தர் நூல்கள் என 204 நூல்களை ஜெகதா எழுதியுள்ளார்.
‘சமுத்திரக் குமாரர்கள்’ புதினம் மதுரை காம ராசர் பல்கலைக் கழக எம்.ஏ. தமிழ் இலக்கிய
மாண வர்களுக்கு பாடநூலாக இடம்பெற்றது.
‘இலக்கியச் சிந்தனை’ இவரது ‘கூட்டாஞ் சோறு’ சிறுகதையை 1983-ஆம் ஆண்டின் சிறந்த
சிறுகதையாகத் தேர்வு செய்தது.
அரசுப் பணி நிறைவு பெற்ற ஜெகாதா, திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சன்
தொலைக்காட்சியில் இயக்கிய ‘மகாபாரதம்’ மெகாதொடருக்கு வசனம் எழுதினார்.