பேராசிரியர் சு.தில்லைவனம்

பேராசிரியர் சு.தில்லைவனம்

Profession அறிஞர்

Biography

23.12.1955-இல் பிறந்தவர். எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.எச்டி. பட் டங்களைப்
பெற்றவர்.

1980-இல் தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1980-85இல்
காரைக்கால் அரசு மகளிர் கல்லூரியிலும், 1985-2007இல் புதுச்சேரி தாகூர் கலைக்
கல்லூரியிலும் பணியாற்றி, 2007 முதல் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற் படிப்பு
மையத்தில் பணியாற்றுகிறார். ‘அரிக்கமேடு ஆய்வு காட்டும் பண்டைத் தமிழ்ச் சமு தாயம்’
என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு.

‘பழந்தமிழர்நாகரிகச்சின் னம் அரிக்கமேடு’, ‘புதுவை மாநிலத் தமிழ் வளர்ச்சி’, ‘தமிழகம்
புதுவை வரலாறும் பண்பாடும்’, ‘புதுச்சேரி மாநில வரலாறும் பண்பாடும்’, ‘புதுச்சேரி
பொது அறிவுக் களஞ்சியம்’, ‘புதுச்சேரி சுற்றுலாத் தலங்கள்’, ‘புதுச்சேரி மாநில
வரலாறு’, ‘அரிக்கமேடு அகழ்வாய்வு’ ஆகிய எட்டு நூல் களின் ஆசிரியர்.

‘தகவல் தொடர்பியல், இதழியல் ஆய்வுகள்’, ‘தகவல் தொடர்பியல்: வானொலி, தொலைக் காட்சி’,
‘திரைப்படக் கலை’, ‘தகவல் தொடர் பியல்: விளம்பரக் கலை’, ‘செம்மொழி நோக்கில் தொல்காப்பிய
ஆய்வுகள்’, ‘செம்மொழி நோக்கில் எட்டுத்தொகை சிந்தனைகள்’, ‘செம்மொழி நோக்கில்
பத்துப்பாட்டுச் சிந்தனைகள்’ ஆகிய ஏழு நூல்களின் பதிப்பாசிரியர். வரலாறு தொடர்பான
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது நெறியாள்கையில் ஏழு மாணவர்கள் இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இவரது ஆய்வரங்கக் கட்டுரைகள்: ‘சங்க இலக்கியத்தில் வேளாண் சிந்தனைகள்’ (தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக் கழகம்), ‘தொல்காப்பியம் பாடத் திட்டம்’ (செம்மொழிக் கருத்தரங்கு), ‘பிரெஞ்சு
இந்தியாவில் வணிகம்’ (உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்), ‘தொல்காப்பிய அகப் பொருள்
கோட்பாடுகள்’ (செம்மொழி- காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் இணைந்து நடத்திய
கருத்தரங்கம்), ‘உணவே மருந்து: பண் டையத் தமிழர் மருத்துவ முறை’ (செம்மொழி நிறுவனக்
கருத்தரங்கு), ‘ஆனந்தரங்கப் பிள்ளை வாயிலாக அறியும் போர்ச் செய்திகள்’ (புதுவைப் பல்கலைக்
கழகம்), ‘வரலாறு மீட்டுருவாக்கம்’ (புதுவை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின்
வரலாற்றுத் துறைக் கருத்தரங்கம்), ‘வானமாமலையின் வரலாற்று ஆய்வுகள்’ (புதுவைப் பல்கலைக்
கழகம்), ‘பழந்தமிழ் இலக் கியத்தில் அறிவியல் சிந்தனைகள்’ (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்),
‘சங்க இலக்கியத்தில் தொல்லியல் சார்ந்த வரலாற்றுக் கூறுகள்’ (செம் மொழி பயிலரங்கம்,
காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரி), ‘வரலாற்று நோக்கில் சங்க கால ஆற்றுப்படை நூல்கள்’
(புதுவைப் பல்கலைக் கழகம்), ‘சங்ககால வணிகமும் அரிக்கமேடு அகழ் வாய்வும்’ (செம்மொழி
மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரி).

2008-இல் தமிழ்நாடு அரசின் விருதையும், 2009-இல் புதுச்சேரி அரசு விருதையும்
பெற்றுள்ளார்.