பேராசிரியர் சு.அழகேசன்

பேராசிரியர் சு.அழகேசன்

Profession அறிஞர்

Biography

திருநெல்வேலி நாங்குநேரி பழுவூரில் அ.சுப்பையா பிள்ளை – காந்திமதி தம்பதியருக்கு
20.03.1955 அன்று பிறந்தார். தந்தையார் அரசு கருவூலக் கணக்கர்.

பள்ளிக் கல்வியை பழுவூர், வடக்கன்குளம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் கற்று, பி.யூ.சி.யை
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து கணிதத்தில் பி.எஸ்சி பட்டம்
பெற்றார். திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகத்தில் பேரா. இளையபெருமாள் மேற்பார்வையில்
‘குறிப்புவினைகள் அமைப்பும் வருகைமுறையும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்
பட்டமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முதுமுனைவர் பட்டமும் பெற்றார்.

1985-இல் சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில்
சேர்ந்தார். 2008-இல் முதுகலை தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியரானார். 2010-இல்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் துறைத்தலைவராக
2013 வரை பணியாற் றினார். கலைப்புல முதன்மையராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பதவி
வகித்துள்ளார். ஆட்சிக்குழு உறுப்பினர், ஆட்சிமன்ற துணைக்குழு ஆய்வுத்துறை ஒருங்கிணைப்
பாளர், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு கல்லூரி உறுப்பினர், பல பல்கலைக் கழகப்
பாடத்திட்டக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

இவரது நெறியாள்கையில் 29 ஆய்வாளர் கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான 155 கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளிலும், பன்னாட்டு அளவில் 25
கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளிலும் பங் கேற்று, ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். 5
அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், 25 புத்தொளி பயிற்சி வகுப்புகளையும், 100க்கு மேற்பட்ட
பட்டறை, கருத்தரங்குகளிலும் பயிற்சி அளித்துள்ளார். சிங்கப்பூர், மலேயா, பினாங்கு,
துபாய் போன்ற நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டவர். 20க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை
எழுதியுள்ளார்.

‘தொல்காப்பியர் மன்றம்’ நிறுவி, அதன் மூலம் தேசிய அளவில் கருத்தரங்குகளை நடத்தி
வருகிறார். ‘அழகு’ அரையாண்டு ஆய் விதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். அகில இந்திய
பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் அறக்கட்டளை நிறுவி ‘தொல்காப் பியர் விருது’
வழங்கி வருகிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ‘சிறந்த பேராசிரியர் விருது’, தூத்துக்குடி
மாவட்ட ‘சிறந்த தமிழறிஞர் விருது’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.