சிலம்பு நா.செல்வராசு

சிலம்பு நா.செல்வராசு

Profession அறிஞர்

Biography

தஞ்சை இடமணல் கிராமத்தில் அ.வீ.அ. நாராயணசாமி – காசியம்மாள் தம்பதியருக்கு 1.3.1955
அன்று பிறந்தார்.

1977-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம், 1978-இல் ஆசிரியர் பட்டயம்,
1981-இல் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பட்டம், 1983-இல் பூண்டி புஷ்பம்
கல்லூரியில் இளமுனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார்.

1984-இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக மொழியியல் துறையில் ஆராய்ச்சி உதவியாளராகவும்,
1984 முதல் 1987 வரை அதே பல்கலைக்கழக இலக்கியத் துறையில் சிறப்பு நிலை
உதவியாளராகவும் பணியாற்றினார்.

1987-இல்புதுவை பல்கலைக் கழக தமிழியல் துறையில் பேராசிரியர் க.ப. அறவாணன் வழி
காட்டுதலில் 1990-இல் முனைவர் பட்டம் பெற்றார்.

1990 – 1992இல் புதுவைப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக அமர்த் தப்பட்ட
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நாட்டுப்புற வழக்காற்றுத் திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப்
பணியாற்றினார். 1993 முதல் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார்.

இவர் எழுதியுள்ள நூல்கள்: ‘சமூகவியல் பார் வையில் தமிழ் மரபுகள்’, ‘சமூக மானுடவியல்
பார்வையில் ‘வள்ளி- முருகன் வழிபாடு’, ‘இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்’, ‘சங்க
இலக்கியம்: சமூக மானுடவியல் ஆய்வுகள்’, ‘இலக்கிய அரசியல்’, ‘கோயில் பண்பாடு’, ‘தொழ்
தமிழர் சமயம்’, ‘வள்ளுவப் பெண்ணியம்’, ‘சங்க இலக்கியமும் சமூகவியலும்’, ‘பாரதி
இந்தியா’, ‘தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல் ஆய்வு’ , ‘பாண்டித்துரை தேவரும் தமிழ்த்
தேசிய அரசி யலும்’, ‘சங்க இலக்கிய மறுவாசிப்பு’, ‘கலாநிதி கைலாசபதியின் இலக்கிய
அரசியல்’ , ‘பண்டை சமூக உருவாக்கமும் சிலப்பதிகாரத்தின்இலக்கிய அரசியலும்’, ‘இலக்கிய
மீள் பார்வை’, ‘ஆனந்த ரங்கப் பிள்ளை’, ‘பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை’, ‘சங்க மரபுகளின்
தோற்றம் வளர்ச்சி மாற்றம்’, ‘சங்க மரபுகள் கட்டுடைப்பும் கட்ட மைப்பும்’, ‘தொல்காப்பியத்தில்
மணமுறைகள்: சமூக மானுடவியல் ஆய்வு’, ‘கண்ணகி தொன்மம்’, ‘ஒற்று: வல்லெழுத்து மிகுமிடம்
மிகா இடம்’, ‘வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்’,
‘சிலப்பதிகாரப் பொருட்களஞ்சியம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகள் 160, நிறைவு செய்த ஆய்வுத்திட்டங்கள் 14, ஒருங்கிணைத்த
கருத்தரங்குகள்/பயிலரங்குகள் 230, பெற்ற விருதுகள் 18, பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள்
முதலியவற்றில் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகப் பங்கேற்ற நிகழ்வுகள் ஏறத்தாழ 50.

இவர், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் துணைச் செயலாளராகவும், அறவாணன்
ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின்
உறுப்பினராகவும் ஆற்றிய பணிகள் ஏராளம்.