| Profession | அறிஞர் |
|---|
காவிரிப்பூம்பட்டினம், கீழையூரில் சீ.வெ.ஆறுமுகம் -அரும்பு தம்பதியருக்கு 15.11.1954
அன்று பிறந்தார்.
தனது ஊரிலுள்ள மீனவர் பாடசாலை, ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, மேலையூர் சீனிவாசா
உயர்நிலைப் பள்ளி ஆகியனவற்றில் தொடக்கக் கல்வியைப் பயின்றவர், பூம்புகார் கல்லூரியில்
புகுமுக வகுப்பை முடித்து, குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டமும்
(1974-77), திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முது கலைப் (1978-80) பட்டமும்
பெற்றார்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் அ.நா.பெருமாள் மேற்பார்வையில்
‘தஞ்சாவூர் மாவட்ட மீனவர் பாடல்கள்: ஓர் ஆய்வு’ என் னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்
(1981- 85), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் (1985- 86) பட்டம் பெற்றார்.
தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக தனது பணியை 1986-இல் தொடங்கிய இவர், அடுத்த
ஆண்டே பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற் றியல் துறை
விரிவுரையாளராகப் பணியேற்றார். பின்னர் படிப்படியாக பணி உயர்வு பெற்று இணைப்
பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு மற்றும் சில தனியார் அமைப்புகளின் நிதியுதவியுடன்
நாட்டுப்புறவியல் தொடர்பான சில ஆய்வுத் திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கவிஞர் தனஞ்செயன் 23.09.1991 அன்று வள்ளி எனும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கௌதம் என்றொரு மகன், அபிதா என்றொரு மகள்.
இவர் புகுமுக வகுப்பு பயின்ற போது இவர் எழுதிய ‘ஞாயிறு’ என்ற முதற்கவிதை 1947
‘கவிதா மண்டலம்’ இதழில் வெளியானது. கல்விக் கண் திறந்த காமராசர் மறைந்தபோது குடந்தைக்
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான இவர் ‘நெடுங்கால் ஒடிந்தது’ என் றொரு கவிதை
எழுதினார். அக்கவிதை ‘குடந்தைக் கல்லூரி ஆண்டு மலரில் வெளி வந்தது.
இவரது முதல் கவிதைத் தொகுதி ‘கட்டு மரங்கள்’ 1979இல் வெளியானது. அடுத்த கவிதைத்
தொகுதி ‘ஒலிக்க மறுத்த தண்டோ ராக்கள்’ (1990) இல் வெளியானது. தாமரை, சிகரம்,
வானம்பாடி, முழக்கம், கவிதா மண்டலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் புலமை பெற்றவர். முப்பது ஆண்டுகள்ஆராய்ச்சி
அனுபவமுள்ள இவர், பதின்மூன்று நூல்களை எழுதி புகழ் பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற் பட்ட
ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இரு நூறுக்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரை களையும்
எழுதியுள்ளார்.
தமிழக அரசின் நாட்டுப்புற நல வாரியத்தில் உறுப்பினராகவும் செய்லாற்றுகிறார்.