பேராசிரியர் இரா.பிரேமா

பேராசிரியர் இரா.பிரேமா

Profession அறிஞர்

Biography

தேனி பெரியகுளம் ராஜரத்தினம் -ராஜம்மாள் இணையருக்கு 15.03.1954 அன்று பிறந்தார்.

பெரியகுளத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரிக் கல்வியை
மதுரை ‘டோக் பெரு மாட்டி கல்லூரி’யில் தொடங்கினார். இங்கு புகுமுக வகுப்பும்,
இளங்கலை, முதுகலை பட்டங்களும் பெற்றார். முதுகலையில் மதுரைப் பல்கலைக் கழகத்தில்
இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றார். கல்லூரி’யின் சிறந்த மாணவிக்கான தங்கப்
பதக்கத்தையும் பெற்றார். அதன்பின், முனைவர் ஆய்வுக்காக மதுரை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்,
பேரா. முத்துச் சண்முகனார் வழிகாட்டுதலில் அவருடன் இணைந்து ‘இரட்டைக் காப்பியக்
கிளைக்கதைகளும் துணைக் கதைகளும்’ என்ற நூலினை எழுதினார். ஆய்வின்போது ஏம்.எம்.ஏ.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது மாணவியாகத் தேர்ச்சி பெற்று, சிறந்த
மாணவியருக்கான டெல்லி தீன்மூர்த்தி பவன் வழங்கும் ஜவஹர்லால் நே+நினைவுப் பதக்கப் பரிசினைப்
பெற்றார். பேரா. முத்துசண்முகனார் பணி நிறைவுக்குப் பின் பேரா.தமிழண்ணல்
வழிகாட்டியானார். ஆய்வு மாணவியாக இருக்கும்போதே சமஸ்கிருதத்தில் பட்டயச் சான்றிதழையும்,
பின்பு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முது கலைப் பட்டயச் சான்றிதழையும் பெற்றார்.
‘இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு: கம்பன், வான்மீகி, துளசிதாசர்’ எனும் ஆய்வை மேற் கொண்டு
1984-இல் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் படித்த மதுரை, டோக் பெருமாட்டிக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
திருமணத்தின் காரணமாக, சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் 4 ஆண்டுகள் பணியாற்றிய பின்
அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் பணியில் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள்
பணியாற்றினார். இக்கால கட்டத்தில் எம்.ஏ. (இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்) பட்டம்
பெற்றார். பின்னர் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில்
சேர்ந்து 16 வருடங்கள் பணியாற்றி (1996 – 2012) பணி நிறைவு பெற்றார். இவரது
நெறிகாட்டுதலில் 20 மாணவிகள் எம்.ஃபில் பட்டமும், 10 மாணவிகள் பி.எச்டி பட்டமும்
பெற்றுள்ளனர்.

இதுவரை 22 நூல்களையும், 100-க்கும் மேற் பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சர்வதேச, தேசிய அளவில் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

இவருக்கு தமிழ்நாடு அரசு 2011-இல் ‘மகாகவி பாரதியார் விருது’டன் ஒரு இலட்சம்
ரூபாயும் தங்கப் பதக்கமும் வழங்கியது.

இவருடைய நூல்கள் குற்றாலம் பராசக்தி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி, சென்னை எத்தி
ராஜ், சென்னை கிறித்துவ கல்லூரி போன்ற வற்றில் பாடநூல்களாக உள்ளன. பாண்டிச்சேரி,
பெரியார், அன்னைத் தெரசா பல்கலைக் கழகங்களில் பார்வை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தற்போது பல்வேறு பல்கலைக் கழகங் களிலும், ஊடகங்களிலும் பல்வேறு வகைகளில்
செயலாற்றுகிறார்.