| Profession | அறிஞர் |
|---|
பழைய திருவிதாங்கூர் தலைநகரான இரணியல் நகரில் சிவ ராமகிருஷ்ண பாகவதர்
-சரோஜாதம்பதியருக்கு 8.5.1953 அன்று பிறந்தார்.
தொடக்கக் கல்வியை நெய்யூர் எல்.எம்.ஏரியா பள்ளியிலும், எஸ்.எஸ்.எல்.சி வரை இரணியல் அரசு
உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இக்கால கட்டத்தில் இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.
நண்பர்களுடன் இணைந்து ‘இலக்கிய கலாச்சாரக் கழகம்’ தொடங்கினார்.
1968-ல் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில்
‘வங்க தேசம் அலறுகிறது’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டி யில் முதல் பரிசு
வென்றார்.
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றபின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்-க்கு
இணையான ஏ.எம்.ஏ. பட்டம் பெற்றார். முனைவர் இரா.மோகன் மேற்பார்வையில் ‘முடியரசன்
கவிதைகள்: ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
திருவிதாங்கூர் இந்து கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
சிறந்த பேச்சாளரான ஸ்ரீகுமார், 275-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும், 90-க்கும் மேற்பட்ட
பயிலரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது மேற்பார்வையில் எம்ஃபில் பட்டம் பெற்றோர் 210, முனைவர் பட்டம் பெற்றோர் 51 என்ற
சிறப்புக்குரியவர்.
தமிழில் வெளிவரும் பெரும்பாலான பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1992-இல் இவரது முதல் நூல் ‘நாவலும் சமு தாயமும்’ வெளியானது. இதனைத் தொடர்ந்து
‘தமிழில் புதிய சிந்தனைகள்’, ‘மொழியும் சமூகமும்’, ‘செம்மொழிச் சிந்தனை’, ‘முடியரசன்
படைப்புகள்’, ‘தமிழில் திணைக் கோட்பாடு களை’ ஆகிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். பிற
ஆசிரியர்களுடன் இணைந்து பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார்.
இவரது நூற்கள் கேரள பல்கலைக் கழகம், கோழிக்கோடு பல்கலைக் கழகம், மனோன் மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகம், தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி, பாளையங்கோட்டை சவேரியார் கல்வியியல்
கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, தில்லி பல்கலைக் கழகம்,
பெங்களூர் பல்கலைக் கழகம், நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றின் பாடத்திட்
டங்களில் இடம்பெற்றிருந்தன.
தற்போது சென்னையில் வசித்து வரும் எஸ். ஸ்ரீகுமார் தமிழிலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை
வெளிக் கொணர்வதிலும், தமிழ் இலக்கிய வரலாறை இன்னும் விரிந்த அளவில் எழுதி வெளியிடும்
பணியிலும் ஈடுபட்டுள்ளார்.