பேராசிரியர் அ.ஆலிஸ்

பேராசிரியர் அ.ஆலிஸ்

Profession அறிஞர்

Biography

தேனி, உசிலம்பட்டி சின்னக் கட்டளை கிராமத்தில் வசிக்கும் அருணாச்சல நாடார் – குருவுத்
தாயம்மாள் தம்பதியருக்கு 05.02.1953 அன்று பிறந்தார். இயற்பெயர் அல்லி. குடும்பத்தினர்
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் ‘ஆலிஸ்’ ஆனார்.

சிவகாசி ஸ்டாண்டர்டு ஃபயர் வொர்க்ஸ் கல்லூரியில் தமிழ் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.
இதே கால கட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை வகுப்பில் பயின்று
சான்றிதழ் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தில் 1977-இல் முதுகலைப் (எம்.ஏ.)
பட்டமும், 1979இல் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டமும், 1983-இல் முனைவர் பட்டமும்
பெற்றார்.

1983-இல் மதுரை பாத்திமா கல்லூரியில் நான்கு மாதங்களும், ஊட்டி எமரால்ட் ஹைட்ஸ்
கல்லூரியில் மூன்று மாதங்களும் விடுமுறைப் பணியிடத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ்த் துறையில் நிரந்தரப் பணியில் சேர்ந்தார்.

1984-இல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராக பணியில்
சேர்ந்தார். பின்னர் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். 30.6.2013 அன்று பணி
நிறைவு பெற்றார். அதன் பிறகு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு வருகைப் பேரா
சிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக் கழகங்களில் பல்வேறு பதவிகளையும் இவர்
வகித்திருக்கிறார்.

இவர் உலக அளவில்- 14, தேசிய அளவில்-80, மண்டல அளவில்-60 என 150-க்கும் மேற்பட்ட
கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

இவரது எம்ஃபில் ஆய்வான ‘கண்ண தாசனின் கவிதை நடை’ 1989-இல் முதல் நூலாக வெளிவந்தது.
இதுவரை பத்து நூல்களை எழுதி யுள்ளார். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள ‘குர்பக்சிங்’
நூலை தமிழாக்கம் செய்துள்ளார்.

‘மக்கள் தகவல் தொடர்பியல் கலைச்சொல் அகராதி’ 1995-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின்
சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் கலைஞர் கைகளால் பரிசும் சான்றி தழும் வழங்கப்
பெற்றார். இவரது மூன்று கட்டு ரைகள் காந்தி கிராம குருவம்மாள் அறக் கட்டளை பரிசு
(2000), பேராசிரியர் ந.வேலுச் சாமி தமிழவேள் கலைஞர் அறக்கட்டளை பரிசு (2003), சதக்
அப்துல்லா அப்பா அறக்கட்டளை விருது (2005), ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

இவரது நெறியாள்கையில் 17 மாணவர்கள் முனைவர் பட்டமும், 48 மாணவர்கள் எம்.ஃபில் பட்டமும்
பெற்றுள்ளனர்.

பல்வேறு கல்லூரிகளில் கல்விக்குழு உறுப் பினர், கல்லூரி ஆட்சி மன்றக் குழு, ஆலோ சனைக்
குழு, பாடத்திட்டக்குழு ஆகிய வற்றில் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல் பட்டுள்ளார்.
தற்போது திருச்சி பாரதி தாசன் பலகலைக் கழகத் தமிழியல் துறையில் மதிப்புறு
பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.