| Profession | அறிஞர் |
|---|
மதுரை ஆவல் சூரன்பட்டியில் வெ.கந்தசாமி ரெட்டியார்- பாப்பம்மாள் தம்பதியருக்கு
15.06.1952 அன்று பிறந்தார்.
பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய இவர், விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில்
புகுமுக வகுப்பையும், அதே கல்லூரியில் 1974-இல் தமிழில் இளங்கலைப் பட்டமும், மதுரை
தியாகராசர் கல்லூரியில் முதுகலைப்பட்டமும், புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியில்
1981-இல் பி.எட். பட்டமும் பெற்றார். ‘மு.மேத்தா கதைகளில் சமூகப் பார்வை’ எனும்
தலைப்பில் ஆய்வு செய்து இளமுனைவர் பட்டத்தையும், ‘இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில்
புராண மரபுக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
1983-இல் வெ.ரா.பரணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு கார்த்திக், திலீப்குமார் என
இரு மகன்கள்.
சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியில் 1983-இல் தமிழ் விரிவுரையாள
ராகப் பணியைத் தொடங்கி, துறைத் தலை வராகப் பணியாற்றி தற்போது பணி நிறைவு
பெற்றுள்ளார்.
இவருடைய படைப்புகள் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்தன. வானொலி,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கவிஞர், குழந்தைகளுக்கான எழுத்தாளர்,
விமர்சகர், தன்னம்பிக்கை எழுத்தாளர், சமூக சேவகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு துறை
சார்ந்த 25 நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.
இவருடைய கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், திருவேங்கடம் விவே கானந்தர்
கல்லூரியிலும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.’விரல்கள் பத்தும் மூலதனம்’ எனும்
தன்னம்பிக்கை நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், சிவகாசி அய்ய நாடார்
ஜானகியம்மாள் கல்லூரியிலும் பாடநூலாக இடம்பெற்றுள்ளது.
‘கண்ணம்மா’ இதழின் ஆசிரியர் குழுவிலும், ‘இனிய ஹைகூ’ இதழின் விருதுநகர் மாவட்ட
பொறுப்பாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இவரது வழிகாட்டுதலில் 3 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 26 ஆய்வாளர்கள் இள முனைவர்
பட்டமும் பெற்றுள்ளனர்.
13 வானொலி நிகழ்ச்சிகளிலும், 4 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பாராட்டுக் கடிதத்தையும், கவிதை
உறவு, தாராபாரதி அறக்கட்டளை, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா போன்ற அமைப்புகளின்
விருதுகளையும் பெற்றுள்ளார்.