பேராசிரியர் பா.உதயக்குமார்

பேராசிரியர் பா.உதயக்குமார்

Profession அறிஞர்

Biography

விழுப்புரம் திருவெண்ணைநல்லூரில் பாண்டுரங்கன் – சாவித்திரி தம்பதியருக்கு
16.01.1952-இல் பிறந்தார்.

பள்ளிக் கல்வியை சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்றார்.
கந்தசாமி நாடார் ஆடவர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப்
பட்டம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக திரைப்படம் பற்றி ‘பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் பாடல்கள்: ஒரு திறனாய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்
பட்டம் (இவ்வாய் வேடு 1978-இல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளி யானது), பல்கலைக்கழக
மானியக்குழு உதவியுடன் ‘அண்ணாவின் சிறுகதைத் திறன்’ என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்
கழகத்தில் முனைவர் பட்டம், மேலும், தொல்பொருள் ஆய்வுத் துறையில் சான்றிதழ் பட்டயம், தமிழ்ப்
பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக்கழகம் இரண்டிலும் புத்தொளிப் பயிற்சி ஆகிய வற்றைப்
பெற்றுள்ளார்.

21.071981-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய
மங்கையர்க்கரசியை திருமணம் புரிந்தார். இத்தம்பதியருக்கு கதிரவன், புதியவன் என இரு
மகன்கன்.

1982-இல் சென்னை, கில் ஆதர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில்
சேர்ந்தார்.1983-இல் ஆசியவியல் நிறுவனத்தில் ஆய்வாளர், 1984-இல் வேலூர் முத்துரங்கம் அரசு
கலைக் கல்லூரியில் துணைப்பேராசிரியர், தருமபுரி அரசுக் கல்லூரியில் துணைப்
பேராசிரியர், 1985-இல் செய்யாறு அ.அ.அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை
விரிவுரையாளர், 1996-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இணைப் பேராசிரியர் ஆகிய
பொறுப்புகளில் பணியாற்றி 2010-இல் பணிநிறைவு பெற்றார்.

எட்டு முனைவர்கள், முப்பது ஆய்வியல் நிறைஞர்கள் பட்டம் பெறுவதற்கு நெறியாளராகப்
பணியாற்றியுள்ளார்.

சென்னை ஆய்வியல் நிறுவனம் தமிழ் இலக் கியம் குறித்து வெளியிட்ட கலைக் களஞ்சியத்திற்கு
100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் குறிப்புகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.

உண்மை, முத்தாரம், வண்ணத்திரை, பாரதி கவிதா மண்டலம், காஞ்சி கூட்டுறவு மலர்,
அ.அ.அரசுக் கல்லூரி ஆண்டுவிழா மலர் ஆகிய வற்றில் இவரது படைப்புகள் வெளியாகின.

ஏழு ஆய்வியல் நூல்கள், ஒரு மொழி பெயர்ப்பு நூல், ஐந்து படைப்பிலக்கிய நூல்கள் ஆகியவற்றை
எழுதியுள்ளார். 23 ஆய்வுக் கட் டுரைகளை வெளியிட்டுள்ளார். 4 அறக்கட் டளைச்
சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தேசிய விருது
பெற்றார்.

பணிநிறைவுக்குப் பிறகு 2010இல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் ‘அண்ணா
இருக்கை’ உருவாக்கி அதில் பணியாற்றுகிறார்.