| Profession | அறிஞர் |
|---|
புதுவை, காரைக்கால் ஹாஜி முகமது அப்துல் காதர் -பாத்திமா உம்மாள் தம்பதிய ருக்கு
28.08.1951-இல் பிறந்தார்.
காரைக்காலிலுள்ள முஸ்லிம் வித்யா சங்கம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை
படித்தார். எட்டாம் வகுப்பை புதினக் கல்லூரியில் படிக்கும் போது ‘அமுதசுரபி’ இதழ்
நடத்திய அட்டைப்படக் கட்டு ரையில் முதல் பரிசு பெற்றார். ஒன்பது முதல் பதினொன்றாம்
வகுப்பு வரை கோவிந்தசாமிப் பிள்ளை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். காரைக்கால்
அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் புகுமுகக் கல்வி யையும், வேதியியலில் இளம் அறிவியல்
பட்டத்தையும் பெற்றார். மதுரை தியாகராசர் கல் லூரியில் முதுகலைத் தமிழ் பட்டம் படித்தார்.
அப்போது பேச்சு, கட்டுரைப் போட்டி களில் பரிசுகள் பெற்றார்.
பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். பேராசிரியர்
சரோஜாவைக் காதலித்து 1978-இல் திருமணம் செய்துகொண்டார். உவமைக் கவிஞர் சுரதா
தலைமையில் ‘வாழ்க்கை ஒரு கலை’ எனும் திருமணக் கவியரங்கம் நடைபெற்றது
1986-இல் காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரிக்கு மாற்றலாகி 25 ஆண்டுகள் இருவரும் ஒரே
கல்லூரியில், ஒரே துறையில் பக்கத்துப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பணியாற்றினர்.
இத்தம்பதியருக்கு சா.பாத்திமா யாஸ்மின், சா.முகமது அப்துல் காதா, சா.இக்பால் உசேன் என
மூன்று குழந்தைகள். இவரது குடும்பத்தில் இப்போது ஏழு பேர் தமிழில் முதுகலைப்
பட்டதாரிகள்.
கதை, கவிதை, கட்டுரை, சமயம், குழந்தை இலக்கியம், நகைச்சுவை, திறனாய்வு, மொழி
பெயர்ப்பு, ஆய்வுக்கோவை என 115 நூல்களின் ஆசிரியர்.
உலகத் திருக்குறள் உயராய்வு மையத்தின் ‘திருக்குறள் விருது’, புதுவை அரசின் ‘கலை
மாமணி’ மற்றும் ‘குன்றக்குடி அடிகளார் சமய நல்லிணக்க விருதுகள், திருவையாறு தமிழய்யா
கல்விக் கழகத்தின் ஔவை விருது, சென்னை கம்பன் கழகத்தின் சீறாப்பபுராண விருது, அமெரிக்க
வாழ்க்கை வரலாற்று நிறுவனத்தின் ‘சிறந்த மாமனிதர்’ விருது, சிங்கப்பூர் தமிழ் இலக் கியக்
கழகத்தின் ‘நகைச்சுவைக் காவலர்’ விருது, மலேசிய இலக்கிய அமைப்புகளின் ‘இலக்கியச்
சுடர்’ விருது, பாரதீய தலித் சாகித்ய அகாடமியின் ‘அம்பேத்கர் தேசிய விருது’,
‘புதுச்சேரி தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இயல், இசை, நாடக சபாவின் ‘முத்தமிழ் ஆறிஞர்
கலைஞர் விருது’ உட்பட பல முக்கியமான விருதுகளைப் பெற்றுள் ளார்.
இவரது நூல்களை ஆய்வு செய்து மூவர் ‘இளம் முனைவர்’ பட்டத்தைப் பெற்றுள்ளனர். இவரைப் பற்றி
ஐவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளனர். இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ‘பேரா.
மு.சாயபு மரைக்காயர் – பேரா.நசீமாபானு அறக்கட்டளை’ நிறுவி அதன் மூலம் செல்வன்
முகம்மது அப்துல் காதர் நினைவுப் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.