முனைவர் கி.சேகர்

முனைவர் கி.சேகர்

Profession அறிஞர்

Biography

11.07.1951 அன்று பிறந்தார். எம்.ஏ., எம்.எட். (தமிழ்), பிஎச்.டி. பட்டங் களைப்
பெற்றுள்ளார்.

1972-இல் திருச்சி, காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி யில் தமிழ்த் துறை பயிற்றுன
ராகப் பணியில் சேர்ந்தார். 1977-இல் அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும்,
1986-இல் மூத்த தமிழ்ப் பேரா சிரியராகவும், 1989-இல் தேர்வு நிலை தமிழ்ப்
பேராசிரியராக வும், 1997-இல் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற் றார். 1999-இல்
மண்ணச்ச நல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2003-இல்
மீண்டும் உருமு தன லெட்சுமி கல்லூரி முதல்வரானார். 2010 இல் மண்ணச்ச நல்லூர் சிதம்பரம்
பிள்ளை மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், தமிழ் உயராய்வுத் துறைத் தலைவராகவும்
பணியாற்றினார். 23 முனைவர்களுக்கு ஆய்வு நெறியாளராக செயலாற்றியுள்ளார்.

‘கம்பனில் நாடும் உறவும்’, ‘ஈட்டில் உவமைகள்’, ‘திருவானைக்கா வரலாறு’, ‘அறிவோம் அலுவ
லகம்’, ‘வாழ்விற்கு வைணவம்’, ‘சமூகச் சீர்திருத் தத்தில் பக்தி இயக்கத்தின் பங்கு’, ஆகியன
இவர் எழுதிய நூல்கள்.

மக்கள் தொடர்பு சாதனங்களில் விஜய், சன், பொதிகை ஆகிய தொலைக்காட்சிகளில் நையாண்டி
தர்பார், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறார். திருச்சி,
தூத்துக்குடி வானொலி நிலைய இலக்கிய நிகழ்ச்சிகளிலும், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்
திறப்பு, கோயில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிக நிகழ்வுகளின் நேரடி வருணனை
நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறார்.

ஆன்மிகம், அரசியல், இலக்கியம் தொடர்பான சொற்பொழிவுகளிலும், பல்வேறு கல்லூரிகளில்
சிறப்பு அழைப்பாளராகவும், கல்லூரி மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சி
அளிப்பவராகவும், தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சி யாளராகவும், ஏராளமான விழாக்களில் கருத்
துரை, சிறப்புரை வழங்குபவராகவும் திகழ்கிறார்.

திருவரங்கம் கம்பன் கழகம், பாரதி – பாரதி தாசன் இலக்கியப் பேரவை ஆகியவற்றின்
அமைப்பாளராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

இலங்கை, அந்தமான், மலேசியா ஆகிய நாடு களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில்
பங்கேற்றிருக்கிறார்.

பாரதிதாசன் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மட்டுமல்லாமல், தென்னக இரயில்வே, திருச்சி மத்திய சிறைப் பிரிவு, திருச்சி சட்டப்
பணிக்குழு, தமிழக அரசின் கேலி எதிர்ப்புக் குழு ஆகியவற்றில் குழு உறுப்பினராகப்
பணியாற்றியுள்ளார். பல்வேறு அமைப்புகளிட மிருந்து ‘சிறந்த எழுத்தாளர்’, ‘சிறந்த
பேச்சாளர்’, ‘சிறந்த கல்லூரி முதல்வர்’, ‘சிறந்த சமூகப் பணி யாற்றும் கல்லூரி முதல்வர்’,
‘வாழ்நாள் சாதனை யாளர்’, ‘தமிழ்மொழிச் செம்மல்’ ஆகிய விருது களைப் பெற்றுள்ளார்.